18 ஆட்டோக்கள், 2 குடோன்களில் மூட்டை மூட்டையாக சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்
18 ஆட்டோக்கள், 2 குடோன்களில் மூட்டை மூட்டையாக சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் | Trichy | Distribution of gift items by a DMK candidate திருச்சி மாவட்டத்தில் நேற்று தமிழக துணை முதல்வர் உதயநிதி திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். உதயநிதி பிரச்சாரம் முடித்து சென்ற பின்னர் நள்ளிரவில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வினியோகம் செய்யவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அழகிய மணவாளம், சேங்குடி, திருப்பஞ்சலி, புலிவலம், வெளியனூர், கீழகோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு டாட்டா ஏசி வாகனத்தில் வந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், 18 ஆட்டோக்கள், 2 குடோன்களில் மூட்டை மூட்டையாக பரிசு பொருட்களையும், சில்வர் பாத்திரங்களையும் தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.