ரத்து செய்ய துணை முதல்வர் உதயநிதியிடம் துரை வைகோ எம்பி வலியுறுத்தல்
ரத்து செய்ய துணை முதல்வர் உதயநிதியிடம் துரை வைகோ எம்பி வலியுறுத்தல் | 1% tax on maize | MP Durai Vaiko | DCM Udayanidhi | TN மக்காச்சோளத்திற்கு மாநில அரசு 1 சதவீதம் செஸ் வரி விதித்துள்ளது. விவசாயிகளை பாதிக்கும் இந்த புதிய வரியை திரும்ப பெற வேண்டும் என மதிமுக முதன்மை செயலரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ வலியுறுத்தினார். திருச்சி வந்த துணை முதல்வர் உதயநிதியை, துரை வைகோ எம்பி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து துரை வைகோ வெளியிட்ட அறிக்கை: திருச்சி வந்த துணை முதல்வர் உதயநிதியை நேரில் சந்தித்து மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கான எனது கோரிக்கையை நேரில் வழங்கினேன். மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்ப பெற்று அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினேன். இதே கோரிக்கையை தமிழக முதல்வர் மற்றும் வேளாண் அமைச்சருக்கு தபாலில் அனுப்பிய தகவலையும் துணை முதல்வரிடம் கூறினேன். எனது இந்த கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொண்டு அதனை விரைந்து நிறைவேற்றித்தர உதவிடுமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.