உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / மழை நீரில் நனைந்தபடி சிரமத்துடன் பக்தர்கள் தரிசனம் | Rainwater entered the Srirangam temple

மழை நீரில் நனைந்தபடி சிரமத்துடன் பக்தர்கள் தரிசனம் | Rainwater entered the Srirangam temple

திருச்சியில் நேற்றிரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால் நகரின் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகள், கோவில்களில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்ய இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் பக்தர்கள் வரிசையில் செல்வர். இடைவிடாமல் பெய்த கன மழையால் பக்தர்கள் வரிசையில் செல்லும் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மழை நீரில் நனைந்தபடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். கோயிலுக்குள் மழை நீர் தேங்க விடாமல் தடுப்பு நடவடிக்கையை கோயில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி