உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் | Trichy | two-wheeler drinking beer | Koothoor Road

கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் | Trichy | two-wheeler drinking beer | Koothoor Road

திருச்சி கூத்தூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் 2 இளைஞர்கள் சென்றனர். வாகனம் சென்று கொண்டிருக்கும் போதே பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் ஒரு கையில் செல்போனை பார்த்தவாரும், மற்றொரு கையில் பீர் பாட்டிலை வைத்து குடித்தவாறும் சென்றார். பாட்டிலில் பீர் தீர்ந்து விட்டதும் பாட்டிலை ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அலட்சியமாக தூக்கி வீசி எறிந்தார். டூவீலரை ஓட்டும் இளைஞரோ வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இளைஞர்களின் செயலை அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். சாலை விதிகளை மதிக்காத இளைஞர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !