/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மாலை அணிவித்து மோட்சம் அளிக்கும் வைபவம் | Trichy | Srirangam
நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மாலை அணிவித்து மோட்சம் அளிக்கும் வைபவம் | Trichy | Srirangam
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிசம்பர் 30ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. டிசம்பர் 31ம் தேதி முதல் 9ம் தேதி வரை பகல் பத்து விழாவில் தினமும் ஒரு அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். கடந்த 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை ராப்பத்து விழாவில் பத்து நாட்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . விழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 10 ம்தேதி அதிகாலை நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம், தீர்த்தவாரி உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றதன.
ஜன 20, 2025