உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / மாநில அளவிலான 11வது சப் ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் | sports | Trichy

மாநில அளவிலான 11வது சப் ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் | sports | Trichy

ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் சார்பில் 11வது மாநில அளவிலான சப்ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி கேகே நகர் சாய் ஜி ரோல்பால் அகாடமி மைதானத்தில் துவங்கியது. தென்னிந்திய ரோல்பால் சங்கச் செயலாளர் சுப்ரமணியம் தலைமையில், போட்டிகளை ஈஸ்வரி குரூப் ஆஃப் சேர்மன் தொழிலதிபர் கே.டி சிவசண்முகம் துவக்கி வைத்தார். ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேஷன் நிர்வாகிகள் சங்கர், கோவிந்தராஜ், சரவணன், பிரேம்நாத், ராஜசேகர், மணிகண்டன், மது நீதா, காயத்ரி, ஜெயக்குமார், ராபின் ராஜகாந்த் உடனிருந்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் இப்போட்டியில் திருச்சி, சென்னை, நாகை, கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர் மற்றும் மகளிர் என தனித்தனியே காலிறுதி சுற்றுகள் லீக் முறையிலும், அரையிறுதி போட்டிகள் நாக்அவுட் முறையிலும் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகள் செப்டம்பர் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறும் அகில இந்திய அளவிலான ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று விளையாடுவர். இன்று நடைபெற்ற போட்டியில் கடலூர் அணி, அரியலூர் அணியை 3 -2 என்ற கோல் கணக்கிலும், காஞ்சிபுரம் அணி, கன்னியாகுமரி அணியை 6 - 3 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி