உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / மாணவன் இறப்பால் சோகத்தில் முடிந்த சந்தோஷ நிகழ்வு | Trichy | Student dies due to electrocution

மாணவன் இறப்பால் சோகத்தில் முடிந்த சந்தோஷ நிகழ்வு | Trichy | Student dies due to electrocution

மாணவன் இறப்பால் சோகத்தில் முடிந்த சந்தோஷ நிகழ்வு | Trichy | Student dies due to electrocution திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராசுவுக்கு சொந்தமான புதிய ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி திறப்பு விழா ஏற்பாடுகள் நடக்கிறது. வரும் 30ம் தேதி முன்னாள் அமைச்சர் தங்கமணி புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவிற்காக கட்டிடத்தில் மின்விளக்கு அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்தன. பைத்தம்பாறையை சேர்ந்த கருணாகரன் வயது 20, கட்டிடத்தின் மேல் மாடியில் நின்று மின்விளக்குகளை பொருத்தி கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், நிலைதடுமாறி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு முசிறி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சிஅரசு ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். உயிரிழந்த கருணாகரன் முசிறி தனியார் ஐடிஐ யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. முசிறி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜன 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை