உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / போக்குவரத்து விதி மீறும் பள்ளி மாணவர்கள் | Students who violate traffic rules | Trichy

போக்குவரத்து விதி மீறும் பள்ளி மாணவர்கள் | Students who violate traffic rules | Trichy

திருச்சியில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பலர் டூவீலர்களில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பள்ளி நிர்வாகம் மாணவர்களை டூவீலர்களில் வர அனுமதிக்காததால் பள்ளிக்கு அருகாமையில் நிறுத்திவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். திருச்சி கண்டோன்மென்ட், பீமநகர், ஜங்ஷன் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் டூவீலர்களில் மூன்று பேர், நான்கு பேர் வரை ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். அதிக திறன் கொண்ட டூவீலர்களை ஓட்டுவதோடு செல்போன் பேசிக்கொண்டே பயணிப்பதும் தொடர்கிறது. டிராஃபிக் போலீசார் கண் முன்னே மாணவர்களின் விதிமீறல் நடக்கிறது. போலீசார் கண்டு கொள்ளாததால் விதிமீறல் நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக தொடர்கிறது. 18 வயது குறைவானவர்களுக்கு டூவீலர் லைசென்ஸ் கிடையாது. அந்த வாகனத்தின் உரிமம் பெற்றோர்கள் அல்லது வேறு ஒருவரின் பெயரில் இருக்கும். ஆகவே அவர்கள் பிடிபடும் பட்சத்தில் பெற்றோர்களுக்கு சட்டப்படி தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சிறார்கள், பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்கினால் மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும் பெற்றோருக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன சட்டம் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் அமலாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு டூவீலர்களை கொடுக்கக் கூடாது. டூவீலர் ஓட்டி சிறுவர் இருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பூனேயில் நடந்தது. அதுபோன்ற துயர சம்பவம் திருச்சியிலும் நிகழாமல் தடுக்க டிராஃபிக் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ