3 மாதத்தில் 200 பேர் ஹாஸ்பிடலில் அட்மிட் | Trichy | Street dogs rampage 20 injured
3 மாதத்தில் 200 பேர் ஹாஸ்பிடலில் அட்மிட் / Trichy / Street dogs rampage 20 injured திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மஸ்தான் தெரு மற்றும் காந்தி தெருவில் சுற்றத்திரிந்த தெருநாய்கள் சாலையில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்ததில் நேற்று காலை முதல் இரவுக்குள் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை மணப்பாறை அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். கடந்த மூன்ற மாதத்தில் 200 க்கும் மேற்பட்டோர் தெருநாய்களிடம் கடிபட்டதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அவர்கள் மணப்பாறை அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜனவரி 11ம் தேதி நாய்க்கடிக்கு ஆளான நாகராஜ் என்பவர் நாய்களை கட்டுப்படுத்தக்கோரி நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். நகராட்சி அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனார். செவலூர் பிரிவில் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆப்ரேஷன் தியேட்டர் மூடப்பட்டுள்ளது. அதை உடனே திறந்து நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஏற்கனவே குக ஆப்ரேஷன் செய்த பல நாய்கள் மீண்டும் கருத்தரித்தது. எனவே குக ஆப்ரேஷனை முறையாக செய்ய வேண்டும் எனவும் நகராட்சிக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.