உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / சுவற்றில்சாரி பிரதர் சாரி சிஸ்டர் எனஎழுதி வைத்து திருட்டு |Two' wheeler stolen in bank banager house

சுவற்றில்சாரி பிரதர் சாரி சிஸ்டர் எனஎழுதி வைத்து திருட்டு |Two' wheeler stolen in bank banager house

திருச்சி மாவட்டம், செல்வம் நகரை சேர்ந்தவர் இளங்கோ. துறையூர் தனியார் வங்கியில் மேனேஜராக பணிபுரிகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பின் இளங்கோ வீடு திரும்பிய போது முன்பக்க கதவு திறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பீரோவை உடைத்து திருட முயன்ற திருடர்கள் ஏதும் கிடைக்காததால் போர்ட்டிகோவில் நின்ற டிவிஎஸ் ஜூபிடர் என்ற டூவீலரை திருடி சென்றனர். வீட்டில் திருட ஏதும் கிடைத்ததால் விரக்தி அடைந்த திருடர்கள் வீட்டின் உள் சுவரில் , சாரி பிரதர்.. சாரி சிஸ்டர்... மன்னித்து விடுங்கள் என மன்னிப்பு கேட்டிருந்தனர். இப்பகுதியில் போலீசாரின் ரோந்து குறைவாக உள்ளதால் அடிக்கடி திருட்டு நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி