உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திருச்சி திருவானைக்காவல்பகுதியில்தயாராகும் விநாயகர் சிலைகள் | Vinayagar Chaturthi Festival | Trichy

திருச்சி திருவானைக்காவல்பகுதியில்தயாராகும் விநாயகர் சிலைகள் | Vinayagar Chaturthi Festival | Trichy

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் செக் போஸ்ட் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. ஆர்டரின் பேரில் மரவல்லி கிழங்கு மாவு மற்றும் கேழ்வரகு மாவு கலவையில் சிலைகளை தயாரிக்கின்றனர். சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் போது கிழங்கு மாவு மற்றும் கேழ்வரகு மாவு மீன்களுக்கு உணவாக பயன்படும். இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு புது வரவாக சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் விநாயகர், யானையின் மீது அமர்ந்திருக்கும் விநாயகர், விநாயகரின் வலது பக்கம் வாத்து, இடது பக்கம் காளை மாடு உடன் காட்சி தரும் விநாயகர். என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை தயார் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கபடும் சிலைகள் தத்ரூபமாக இருப்பதால் உள் மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் திருவானைக்காவல் வந்து விநாயகர் சிலையை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை