உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / வேலூர் / குடியாத்தம் இளைஞருக்கு குவியும் பாராட்டு | Vellore | Commonwealth Competition

குடியாத்தம் இளைஞருக்கு குவியும் பாராட்டு | Vellore | Commonwealth Competition

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூரைச் சேர்ந்த வலுதூக்கும் வீரர் மூர்த்தியின் மகன் ஜெயமாருதி. இவர் தென்னாப்பிரிக்கா சன்சிட்டி நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் 83 கிலோ உடல் எடை பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். ஸ்குவாட் பிரிவில் 302.5 கிலோ எடை தூக்கி முதல் தங்கப்பதக்கம், பெஞ்ச்பிரஸ் பிரிவில் 185 கிலோ எடை தூக்கி 2வது தங்கப்பதக்கம், டெட் லிப்ட் பிரிவில் 295.5 கிலோ எடை தூக்கி 3வது தங்கப்பதக்கம் வென்றார். மொத்தம் 783 கிலோ எடையை தூக்கியதற்கு தங்கப்பதக்கம் என மொத்தம் 4 தங்கப் பதக்கங்களை வென்று புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். ஜெயமாருதி ஏற்கனவே 2022 ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர் குறிப்பிடத்தக்கது.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை