/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ பெற்றோருக்கு கோயில் எழுப்ப முடிவு செய்த ஆசை மகன் | Wax statue for parents | vellore
பெற்றோருக்கு கோயில் எழுப்ப முடிவு செய்த ஆசை மகன் | Wax statue for parents | vellore
வேலூர் மாவட்டம் காட்பாடி செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். போக்குவரத்து கழக ஊழியர். இவரது தந்தை லோகநாதன். ஓய்வு ஆசிரியரான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய் ராதாபாய் அம்மாள். கடந்தாண்டு லோகநாதனின் நினைவு நாளில் ராதாபாய் அம்மாளும் இறந்தார். தாய் தந்தையின் அன்பை மறவாத சீனிவாசன், பெற்றோருக்கு மார்பளவு மெழுகில் சிலை செய்து சொந்த ஊரில் ஊர்வலமாக எடுத்து வந்து அன்னதானம் செய்தார். பெற்றோர் நினைவாக கோயில் கட்டவும் முடிவெடுத்துள்ளார் இந்த அன்பு மகன் சீனிவாசன். பெற்றோரை மறவாத சீனிவாசனின் செயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
நவ 03, 2024