உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / திருச்சியை சேர்ந்த நால்வர் கும்பல் கைது | Villupuram | Seizure of ₹1.60 crore hawala money

திருச்சியை சேர்ந்த நால்வர் கும்பல் கைது | Villupuram | Seizure of ₹1.60 crore hawala money

திருச்சியை சேர்ந்த நால்வர் கும்பல் கைது | Villupuram | Seizure of ₹1.60 crore hawala money | 4 Arrested விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்டில் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேக நபர் நால்வரை ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களது பைகளை சோதனை செய்கையில் அதில் கட்டுக்கட்டாக தலா 40 லட்சம் ரூபாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மொத்தம் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான ஆதாரம் இல்லை. அவர்களிடம் விசாரிக்கையில் திருச்சியை சேர்ந்த ராஜா முகமது, முகமது ரியாஸ், சிராஜுதீன் மற்றும் அபுபக்கர் சித்திக் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் நால்வர் கும்பலுக்கு வெளிநாடுகளில் இருந்து சிலரால் அனுப்பப்பட்ட ஹாவாலா பணம் என தெரியவந்தது. விசாரணை நடக்கிறது.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை