/ மாவட்ட செய்திகள்
/ விழுப்புரம்
/ மரக்காணம் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் 5 கிராமம் | மக்கள் கண்ணீர் | Villupuram flood | Rain Today
மரக்காணம் அருகே வெள்ளத்தில் தத்தளிக்கும் 5 கிராமம் | மக்கள் கண்ணீர் | Villupuram flood | Rain Today
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை பெய்தது. இதில் கந்தாடு கிராம ஏரி உடைந்தது. இதனால் மண்டகப்பட்டு, புதுப்பேட்டை, காணிமேடு, அகரம், சூனாம்பேடு ஆகிய 5 கிராமங்கள் நீரில் மூழ்கின. இப்பகுதியில் பயிரிட்ட 2 ஆயிரம் ஏக்கர் மணிலா, நெல், உளுந்தை வெள்ளம் முற்றிலும் அடித்து சென்றது. காணிமேடு கிராமம் முதல் சூனாம்பேடு வரை 4 கிலோமீட்டர் ரோடு வெள்ளத்தில் மூழ்கியது. அரசு எந்த நடவடிங்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஜன 08, 2024