உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / காணிமேடு தரைப்பாலம் மூழ்கியது! ஆற்றில் 1 கிமீ தூரம் சடலம் சுமந்த உறவினர்கள் | villupuram

காணிமேடு தரைப்பாலம் மூழ்கியது! ஆற்றில் 1 கிமீ தூரம் சடலம் சுமந்த உறவினர்கள் | villupuram

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை கொட்டித்தீர்த்தது. காணிமேடு மண்டகப்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இந்த நிலையில் காணிமேடு பகுதியை சேர்ந்த 32 வயதான பாண்டுரங்கன் உடல் நலக்குறைவால் இறந்தார். தரைப்பாலம் மூழ்கியதால் அவரது உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் இடுப்பளவு தண்ணீர் ஓடும் ஆற்றில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இப்படி தான் துன்பப்படுகிறோம். ஆற்றை கடக்க வசதியாக மேம்பாலம் கேட்டும் கிடைக்கவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர்.

ஜன 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை