திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்|mel malayanur koil function
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கோயில் பூசாரிகளும் பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினார். நள்ளிரவு 12 மணிக்கு மகாதீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜூலை 06, 2024