உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுதுார் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

ஸ்ரீவில்லிபுதுார் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

ஸ்ரீவில்லிபுதுார் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து | Fireworks factory explosion | 2 died | viruthunagar விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயதேவன்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு சொந்தமான ஜெயந்தி பட்டாசு ஆலை அங்குள்ளது. இங்கு 20 க்கும் மேற்பட்ட அறைகளில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்தனர். இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு தேவையான ரசாயன கலவையின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மூன்று அணைகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில் புலி குட்டி மற்றும் கார்த்திக் ஆகியோர் உடல் சிதறி ஸ்பாட்டிலேயே பலியாகினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை ஸ்ரீவில்லிபுத்துார் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ