திருப்பத்துார் அருகே படுபாதக சம்பவம் | Tirupattur | Horror at the quarry | 5 workers died
திருப்பத்துார் அருகே படுபாதக சம்பவம் / Tirupattur / Horror at the quarry / 5 workers died திருப்பத்தூர் மல்லாக்கோட்டையில் மேகா பூளு மெட்டல் என்ற கல்குவாரியை அதே பகுதியை சேர்ந்த மேகவர்மன் என்பவர் நடத்தி வருகிறார். குவாரியில் மல்லாக்கோட்டை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் என ஏராளமானோர் வேலை செய்கின்றனர். இன்று காலையில் குவாரியில் வெடி வைத்து துளை போடும் பணிகள் நடந்தது. துளை போடும் போது திடீரென பயங்கரமான அதிர்வு ஏற்பட்டது. அதிர்வில் குவித்து வைக்கப்பட்டிருந்த பாறைகள் ஒன்றன் பின் ஒன்றாக 400 அடி பள்ளத்தில் மள மளவென சரிந்து பயங்கர வேகத்தில் கீழே உருண்டன. கீழே வேலை பார்த்து கொண்டிருந்த மல்லாகோட்டையை சேர்ந்த ஆண்டிச்சாமி, கணேசன், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் ஹர்கித் என 3 பேர் மீது பாறைகள் உருண்டு விழுந்து உயிருடன் புதைந்தனர். திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த குளிச்செல்லிபட்டியை சேர்ந்த கணேசன் வயது 43, இ மலம்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி வயது 50 இருவரது உடல்களை 2 மணி நேரம் போராடி மீட்டனர். பாறைகளுக்குள் சிக்கிய பொக்லைன் டிரைவர் ஹர்கித் உடல் மீட்பதில் சிக்கல் நீடித்தது. பாறைகள் சரிந்து படுகாயமடைந்த 3 பேரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் இ மலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் வயது 50, ஓடைப்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் வயது 49, உயிரிழந்தனர். படுகாயமடைந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த மைக்கேல் வயது 49 மதுரையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். சம்பவ இடத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித், எஸ்பி ஆசிஷ் ராவாத் ,தேவகோட்டை சப் கலெக்டர் வெங்கட் ஆயுஸ் வட்ஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர். தனியார் கல் குவாரியில் 400 அடி பள்ளத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது தலைமறைவான குவாரி உரிமையாளர் மேகவர்மன், மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோரை திருப்பத்துார் போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.