விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரில் காமராஜர் பிறந்த நாள் விழா | Kamaraj birthday celebration
விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரில் காமராஜர் பிறந்த நாள் விழா | Kamaraj birthday celebration | Governor Ravi participation விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரவி பங்கேற்று பேசினார். இந்தியாவில் சிறந்த மனிதர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் காமராஜர். இளம் வயதில் தந்தையை பறிகொடுத்தும், 16 வயதிலேயே விடுதலை போராட்டத்தில் பங்கேற்று அரசியலில் நுழைந்தவர். அவர் ஆட்சி செய்த 1954 முதல் 1963 வரை, 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம். ஆரம்ப கல்வி, உயர் கல்வி பயில மாணவர்கள் பல கி.மீ., செல்வதை குறைக்க தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அதனால் தான் இன்று இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி., சென்னையில் உருவாகவும், தமிழகத்தில் அதிக தொழில் நிறுவனங்கள் இருப்பதற்கும் காமராஜர் மட்டுமே காரணம். 13க்கும் மேற்பட்ட மிகப்பெரிய அணைகளை கட்டி விவசாயம், நீர்வளம் பெருக வழிவகை செய்தவர். இன்று நாம் பேசும் சமூக நீதியை, அன்றே நிலை நிறுத்தியவர் எனவும் அவர் கூறினார்.