உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விருதுநகர் / திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் | Chariot | Andal Temple | Srivilliputhur

திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் | Chariot | Andal Temple | Srivilliputhur

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஜூலை 28ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. அன்றிரவு 16 வண்டி சப்பர ஊர்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி ஆண்டாள் தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் திருத்தேருக்கு எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை 9.5 மணிக்கு திருத்தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் மற்றும் பட்டர்கள் செய்தனர். தேரோட்டத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ