வேகமாக வருது... புயல் பற்றிய முக்கிய அப்டேட் cyclone montha update | imd chennai | tn weather today
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம், ஆந்திராவை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் இந்த புயல் சின்னம், காலையில் சென்னையில் இருந்து 810 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இப்போது மேலும் 90 கிலோ மீட்டர் நெருங்கி வந்து இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மோந்தா புயல் பற்றிய அதன் புதிய அறிவிப்பு: மாலை நிலவரப்படி தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் சேரும் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. சென்னையில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்திலும், விசாகப்பட்டினத்தில் இருந்து 790 கிலோ மீட்டர் தூரத்திலும் அந்தமானில் இருந்து 670 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்கிறது. மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் முன்னேறி வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். பின்னர் மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 28ம் தேதி காலையில் தீவிர புயலாக உருவெடுக்கும். பின்னர் அதே தினம் மாலை அல்லது இரவில் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறை காற்று வீசும். இடையே இடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. இந்த புயல் காரணமாக ஆந்திரா, தமிழகம் மற்றும் ஒடிசாவில் பரவலாக கனமழை கொட்டித்தீர்க்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. #CycloneMontha #TNHeavyRainAlert #ChennaiWeatherIMD #CycloneUpdates #ChennaiRain #WeatherWarning #Rain Alerts #WeatherForecast #CyclonePreparedness #SouthIndiaWeather #ChennaiUpdates #IMDWeather #StormTracking #HeavyRain #MonsoonSeason #WeatherEmergency #SevereWeather #ChennaiLife #ClimateAlerts