/ தினமலர் டிவி
/ பொது
/ பேராசிரியருக்கு எதிராக கொந்தளித்த பேராசிரியைகள் | Head of Tamil department suspended | Vedasandur |
பேராசிரியருக்கு எதிராக கொந்தளித்த பேராசிரியைகள் | Head of Tamil department suspended | Vedasandur |
தமிழ் துறை தலைவரை சஸ்பெண்ட் செய்ய வைத்த கல்லூரி மாணவிகள் செல்போனால் பிரச்னை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பொள்ளாச்சியை சேர்ந்த பேராசிரியர் அருள்செல்வம் தமிழ் துறை தலைவராக பணிபுரிந்தார். 4 நாட்களுக்கு முன் மாணவிகளையும் பேராசிரியைகளையும் செல்போனில் அருள்செல்வம் போட்டோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை சில மாணவிகள் கவனித்து விட்டனர். பேராசிரியர் அருள்செல்வத்திடம் வாக்குவாதம் செய்தனர். எதற்காக போட்டோ எடுத்தீர்கள்? என கேட்டு சண்டை பிடித்தனர்.
டிச 11, 2024