உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரில் எஸ்கேப் ஆன கும்பலை தேடும் தனிப்படை Advocate | Covai crime| coimbatore

காரில் எஸ்கேப் ஆன கும்பலை தேடும் தனிப்படை Advocate | Covai crime| coimbatore

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் வக்கீல் உதயகுமார். வயது 48. பொள்ளாச்சிக்கு செல்வதாக மனைவி நித்யாவள்ளியிடம் கூறிவிட்டு காரில் புறப்பட்டார். திரும்பி வரவில்லை. மைலேரிபாளையத்தில் கோழிப்பண்ணை அருகே உதயகுமார் சடலமாக கிடந்தார். கழுத்து, மார்பில் வெட்டு காயங்கள் இருந்தன. கோவை எஸ்பி பத்ரிநாராயணன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்தார். முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் உதயகுமாரை வெட்டி கொன்றுவிட்டு அவரது காரிலேயே தப்பி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகள் யார், எதற்காக கொலை நடந்தது பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி தனிப்படை போலீசார் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை