/ தினமலர் டிவி
/ பொது
/ * மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் தீப்பற்றியதால் பரபரப்பு | Mettupalayam Railway Station Fire
* மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் தீப்பற்றியதால் பரபரப்பு | Mettupalayam Railway Station Fire
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகாலை 3 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் தீப்பற்றி, அறை முழுவதும் பரவியது. உள்ளே இருந்த பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. மேல்தளத்துக்கும் தீ பரவியது. பணியில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள், ரயில்வே சிக்னல் பேனல், முக்கிய கோப்புகள், பர்னிச்சர், மின்சான பொருட்கள், 3 லட்சம் ரூபாய் பணம் எரிந்து சாம்பல் ஆகிவிட்டன.
பிப் 15, 2024