லைசென்ஸ் இல்லாமல் இயக்கப்படும் படகுகள்: விசாரணையில் அம்பலம் | Puducherry| Boat capsizes
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அண்டை மாநில சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவது வழக்கம். சுற்றுலா வந்த வடமாநில தம்பதி, தேங்காய் திட்டு துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் சுற்றிப்பார்க்க சென்றனர். செல்பி எடுக்க முயன்றபோது, வீரானம்பட்டி அருகே ஆற்றில் படகு கவிழ்ந்தது. தத்தளித்த தம்பதியை சிறு காயங்களுடன் மீட்ட சக மீனவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த படகு வீராம்பட்டினம் யுவராஜ் என்பவருடையது என்பதும், அரவிந்த் என்பவர் இயக்கியதும் தெரிந்தது. சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்வதற்கான லைசன்ஸ் இல்லாமல் படகை இயக்கி உள்ளனர். இது பற்றி விசாரணை தொடர்கிறது. கடந்த ஏப்ரலில் கூட புதுச்சேரி துறைமுகம் அருகே படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப்பயணிகள் 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் சுற்றுலாப்பயணிகளை படகில் அழைத்து செல்வதும்; விபத்து நடப்பதும் தொடர்கிறது. சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் ஆர்வலர்கள். #PuducherryBoatCapsize #TouristRescue #UnlicensedBoats #VeerampattinamIncident #PondicherryTourism #BoatSafety #IndiaNews #TouristAccident #FishermenHeroes #PuducherryHarbor