இன்ஸ்டாவில் இணைந்த ஜோடி: விபரீத முடிவால் குடும்பங்கள் அதிர்ச்சி 40 year woman and lover dies insta
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வெங்கடலட்சுமி பத்மா (40). கணவர், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகன் படித்து விட்டு மெடிக்கல் ரெப்பாக உள்ளார். மகள் இறுதியாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். வீட்டு வேலைகளை முடித்ததும் ப்ரீயாக இருக்கும் நேரங்களில் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போடத் துவங்கினார் பத்மா. நாளடைவில் இன்ஸ்டாவிலேயே மூழ்கிக் கிடந்த பத்மாவுக்கு திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி கைலாசகிரி காலனியைச் சேர்ந்த சுரேஷ் (25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. மொபைல் போனில் மணிக்கணக்கில் பேசத் துவங்கினர். இருவரும் இன்ஸ்டாவில் சேர்ந்து ரீல்ஸ் போட்டனர். நேரிலும் சந்தித்து காதலில் திளைத்தனர். உல்லாசமாக இருக்கத் துவங்கினர். வீட்டை கவனிக்காமல் கள்ளக்காதலனுடன் ஊர் சுற்றத் துவங்கியதை கணவரும் பிள்ளைகளும் கண்டித்தனர். இதனால் வெறுப்பான பத்மா, உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் குடும்பத்தை உதறித் தள்ளி விட்டு ஒரு வருடத்திற்கு முன்பு காளஹஸ்திக்கு சென்று சுரேஷ் வீட்டில் தங்கினார். பத்மா குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் போலீசார் ஸ்ரீகாளஹஸ்திக்கு சென்று சுரே ைஷ ரெண்டு தட்டு தட்டி பத்மாவை குடும்பத்துடன் சேர்த்து வைத்தனர். ஆனால் கடந்த டிசம்பர் மீண்டும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். சுரேஷ் இல்லாமல் என்னால் வாழ முடியாது; மன்னித்து விடுங்கள் என கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றதால் அவரை கணவரும் பிள்ளைகளும் தலைமுழுகினர். காளஹஸ்திக்கு சென்ற பத்மா, சுரே ைஷ திருமணம் செய்தார். இவர்களது திருமணத்தை சுரேஷின் பெற்றோரும் ஏற்கவில்லை. உனக்கு 25 வயதுதான் ஆகிறது; அவளுக்கு 40 வயதாகிறது; எப்படி ஒத்து வரும் என பெற்றோர் கேட்டனர். பத்மா மீது இருந்த மோகத்தால் பெற்றோரை உதறி தள்ளி விட்டு, தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்த துவங்கினர். கல்யாணமான புதிதில் நாட்கள் ஜாலியாக கழிந்தன. ஜோடியாக சேர்ந்து இன்ஸ்டாவில் வீடியோ போடத் துவங்கினர். மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்பதுபோல இவர்களது உல்லாச வாழ்க்கை நீண்டநாள் நிலைக்கவில்லை. சுரேஷ் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தார் வருவாய் போதுமானதாக இல்லாததால் இருவருக்கும் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்பட்டு பூதாகரமாக மாறியது. 3 தினங்களுக்கு முன் சமைத்த உணவை வேஸ்ட்டாக குப்பையில் கொட்டினார், பத்மா. ஆத்திரமடைந்த சுரேஷ், கண்டபடி திட்டியிருக்கிறார். கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவனுக்குத்தான் சாப்பாட்டின் அருமை தெரியும்; ஓடி வந்த உனக்கு எங்கே தெரியப்போகுது என ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இரவு முழுவதும் சண்டை நடந்தது. அவசரப்பட்டு தவறு செய்து விட்டோம் என நினைத்து விடிய விடிய அழுதார் பத்மா. மீண்டும் கணவர் பிள்ளைகள் முன் எப்படி போய் நிற்க முடியும்? என நினைத்தவர், அதிகாலையில் தூக்கு போட்டு தொங்கினார். காலையில் கண்விழித்த சுரேஷ், பத்மா தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். விஷம் வாங்கி வந்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். மறுநாள் நினைவு திரும்பியதால் சுரேஷ் தட்டுத்தடுமாறி எழுந்தார். ஆட்டோ பிடித்து அம்மா வீட்டுக்கு சென்றார். உங்க பேச்சை கேட்காமல் பத்மாவை கல்யாணம் செய்தேன்; சாப்பாட்டை ஏன் வேஸ்ட் செய்கிறாய் என கேட்டதற்கு தூக்கில் தொங்கி விட்டாள்; பயத்தில் நானும் விஷம் குடித்து விட்டேன் என பெற்றோரிடம் கூறி விட்டு மீண்டும் மயங்கி சரிந்தார். பதறிப்போன பெற்றோர் சுரே ைஷ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்து போனார். சம்பவம் குறித்து காளஹஸ்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்துக்கு அடிமையாகி பலர் தங்களது வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். கடைசியில் உயிரையே மாய்த்துக்கொள்கின்றனர். அந்த பட்டியலில் சுரேஷ்-பத்மா ஜோடியும் சேர்ந்துள்ளது. உல்லாச வாழ்க்கை சலித்துப்போனதால் பத்மா, சுரேஷ் எடுத்த விபரீத முடிவு அவர்களது குடும்பங்களை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.