உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயில் நிலத்தில் மாற்று மத பள்ளி: பின்னணி என்ன? | 5 IAS officers apologize

கோயில் நிலத்தில் மாற்று மத பள்ளி: பின்னணி என்ன? | 5 IAS officers apologize

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் பழமையான தேவநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது. கோயில் நிலத்தை ஆக்கிரமித்த பள்ளியை அகற்ற வேண்டும் என பாஜ நிர்வாகி வினோத் ராகவேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், பள்ளியை அப்புறப்படுத்தி, அதற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். மீட்கப்பட்ட நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2024ல் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை கோயில் நிலம் மீட்கப்படவில்லை. ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து வினோத் ராகவேந்திரன் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ஜூன் 24ல் இந்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் ஸ்ரீராம், சுந்தர்மோகன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ