/ தினமலர் டிவி
/ பொது
/ மின்சார ரயில்கள் ரத்து; திணறியது GST சாலை 55 trains cancelled| thambaram gst road traffic
மின்சார ரயில்கள் ரத்து; திணறியது GST சாலை 55 trains cancelled| thambaram gst road traffic
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை பீச் வரை இயக்கப்படும் 55 மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக ரயிலில் செல்லும் பயணிகள் கார், பைக் போன்ற சொந்த வாகனங்களில் செல்லத்துவங்கினர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை டிராபிக் ஜாமில் சிக்கி திணறியது. தாம்பரத்தில் பஸ்களிலும் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. இடம்பிடிக்க மக்கள் அடித்துபிடித்து ஏறினர். கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் வெகுநேரம் காத்திருக்க நேர்ந்தது.
ஜூலை 27, 2024