உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வன விலங்குகளை காப்பதில் இந்தியா முன்னிலை: மோடி பெருமிதம் 58th Tiger Reserve in MP| Shivpuri Tiger R

வன விலங்குகளை காப்பதில் இந்தியா முன்னிலை: மோடி பெருமிதம் 58th Tiger Reserve in MP| Shivpuri Tiger R

நாட்டில் புலிகளை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், மேகமலை உள்ளிட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புலிகள் கணக்கிடப்பட்டு அவற்றை பாதுகாக்கவும், அவற்றின் இன விருத்திக்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டிடல் மொத்தம் 57 புலிகள் காப்பகங்கள் உள்ள நிலையில், மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரியில் உள்ள தேசிய பூங்கா, நாட்டின் 58வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மார் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ