உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் சோகம்! 6 Fisherman missing | Coast guard searching | Tuticorin

மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் சோகம்! 6 Fisherman missing | Coast guard searching | Tuticorin

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஸ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21ம் தேதி கடலுக்கு சென்றனர். ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துள்ளனர். கடந்த 26ம் தேதி கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் இதுவரை வரவில்லை. அவர்களை யாரும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி சங்கத்தினர் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க இயந்திர கோளாறு ஏற்பட்டு நடுக்கடலில் 6 பேரும் தத்தளிக்கலாம் என்ற சந்தேகத்தில் துாத்துக்குடி மீனவர்கள் 3 நாட்டு படகுகளில் கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் உடனடியாக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரும் மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை