உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இறந்தவரின் வயதை கணக்கிட சுப்ரீம் கோர்ட் சொல்லும் விளக்கம்! Supreme court | verdict | Accident cases

இறந்தவரின் வயதை கணக்கிட சுப்ரீம் கோர்ட் சொல்லும் விளக்கம்! Supreme court | verdict | Accident cases

ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதி செல்லாது! சுப்ரீம் கோர்ட் சொல்வது என்ன? இறந்தவரின் வயதை கணக்கிட சுப்ரீம் கோர்ட் சொல்லும் விளக்கம்! Supreme court | verdict | Accident cases | Aadhar | School TC ஹரியானாவின் ரோதக் பகுதியை சேர்ந்த ஒருவர் 2015ல் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இறந்தவரின் பள்ளி சான்றிதழில் உள்ள பிறந்த தேதியை வைத்து அவரின் வயது 45 என கணக்கிடப்பட்டது. அதன்படி இறந்தவர் குடும்பத்துக்கு 19 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் ஐகோர்ட்டில் முறையிட்டது. ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தேதியை வைத்து வயதை கணக்கிட்டால் 47 வருகிறது. அதன்படிதான் இழப்பீடு வழங்க முடியும் என காப்பீட்டு நிறுவனம் வாதிட்டது. அந்த வாதத்தை ஏற்ற ஐகோர்ட் 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மட்டும் இழப்பீடாக வழங்கினால் போதும் என உத்தரவிட்டது.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ