/ தினமலர் டிவி
/ பொது
/ ஹர்பஜன் சிங் மேற்கு வங்க முதல்வருக்கு கடிதம்! AAP MP | Harbajan singh| Letter | WB CM - Governor
ஹர்பஜன் சிங் மேற்கு வங்க முதல்வருக்கு கடிதம்! AAP MP | Harbajan singh| Letter | WB CM - Governor
கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரும், ஆம்ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதி உள்ளார். பயிற்சி டாக்டருக்கு நேர்ந்த சம்பவம் அனைவரின் மனசாட்சியை உலுக்கி உள்ளது. இந்த வன்முறை செயல், தனிநபருக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான தாக்குதல்.
ஆக 18, 2024