உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவகங்கை அருகே டேங்கர் லாரிகள், பஸ் மோதல் | Accident | Sivaganga

சிவகங்கை அருகே டேங்கர் லாரிகள், பஸ் மோதல் | Accident | Sivaganga

பஸ் மீது மோதிய டேங்கர் லாரிகள் கண் இமைக்கும் நேரத்தில் அதிர்ச்சி ஒரு சைடு பஸ்சே ஒடுங்கியது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் டீசல் ஏற்றிய லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. செம்பூர் காலனி அருகே டேங்கர் லாரி முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது. அப்போது எதிரே காளையார் கோயிலில் இருந்து மதுரை நோக்கி வந்த பஸ் மீது டேங்கர் லாரி மோதியது. பின்னால் வந்த இன்னொரு டேங்கர் லாரியும் பஸ் மீது உரசி சென்று ரோட்டோர பள்ளத்தில் சாய்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு படையினர், உள்ளூர் போலீசார் மீட்புப் பணியில் இறங்கினர். டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசியாமல் இருப்பதற்காக சோப்பு நுரைகளைக் கொண்டு முன்னெச்சரிக்கையாக தடுப்பு பணி நடந்தது. இதனால் மதுரை சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை