அஜித் நிலை என்ன? மானேஜர் புது அப்டேட் actor Ajith kumar dubai car race ajith escaped no injury car
நடிகர் அஜித்குமார் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பந்தயங்களில் பங்கெடுத்துள்ளார். அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் புதிய கார் பந்தய அணியை சமீபத்தில் அஜித் உருவாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரும் 11 மற்றும் 12-ந் தேதிகளில் துபாயில் கார் பந்தயம் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற அஜித் மற்றும் அவரது அணியினர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் அஜித் களமிறங்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், பயிற்சியின்போது எதிர்பாராத விபத்து நடந்துள்ளது. வேகமாக காரை ஓட்டி பயிற்சி செய்தபோது , ரேஸ் டிராக் ஓரமாக இருக்கும் தடுப்பில் கார் பயங்கரமாக மோதியது.