உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இத்தாலி கார் பந்தயத்தில் அஜித் அபாரம்: ரசிகர்கள் மகிழ்ச்சி actor Ajith kumar Italy car race 3rd plac

இத்தாலி கார் பந்தயத்தில் அஜித் அபாரம்: ரசிகர்கள் மகிழ்ச்சி actor Ajith kumar Italy car race 3rd plac

நடிகர் அஜித்குமார் சினிமாவைப்போலவே கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அஜித் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி 3வது இடம் பிடித்து சாதனை படைத்தது. துணை முதல்வர் உதயநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தனர். துபாயை தொடர்ந்து, தற்போது இத்தாலியில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித் அணி மீண்டுமொருமுறை சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்த பல மிகச்சிறந்த அணிகள் இந்த பந்தயத்தில் பங்கேற்றன. 12எச் ரேஸில் பங்கேற்ற அஜித் அணி, GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தி இருக்கிறது. பரிசு பெறுவதற்காக மேடை ஏறியபோது இந்திய தேசியக்கொடியை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், அஜித்குமார்.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ