உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகர் அல்லு அர்ஜூனை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போலீஸ் | Actor Allu Arjun | Theatre woman death

நடிகர் அல்லு அர்ஜூனை மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போலீஸ் | Actor Allu Arjun | Theatre woman death

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. படத்தின் சிறப்பு காட்சிக்கு தெலங்கானா அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சியை பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் தேஜ் ஆஸ்பிடலில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டதாக கூறி அவர் மீது வழக்குப் பதிந்த சிக்கடப்பள்ளி போலீசார், கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். தெலங்கானா ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியதால் மறு தினமே சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிக்கடப்பள்ளி போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ