வடிவேலு உதவியாளர்கள் கம்பளைண்ட்! அகற்ற மறுப்பு | Actor Vadivelu |
நடிகர் வடிவேலு மனைவி சொந்த ஊர் திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர். மதுரை டு பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தை வடிவேலு விலைக்கு வாங்கி இருந்தார். நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் வழங்கியது போக சாலையின் இருபுறமும் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் சில மாதமாக தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டியுள்ளது. பல முறை வடிவேலுவின் உதவியாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் செயல் அலுவலர் சங்கர் கணேசிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக உதவியாளர்கள் கூறுகையில், குப்பைகளை கொட்ட கூடாது என பலமுறை வலியுறுத்தியும் மீண்டும் மீண்டும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அகற்றவும் மறுக்கின்றனர், என்றனர்.