நடிகர் விஷால் பதில் VS நடிகை ஸ்ரீ ரெட்டியின் பதிவு | Actor Vishal | Actress Sri Reddy | Sri Reddy
ஸ்ரீ ரெட்டி சேட்டை தெரியும்! நிறைய செருப்பு இருக்கு வேணுமா விஷால் VS ஸ்ரீ ரெட்டி மலையாள திரையுலகில் எழுந்த பாலியல் புகார்கள் குறித்து நடிகர் விஷால் இன்று பேசினார். நடிகை ஸ்ரீரெட்டி உங்கள் மீது புகார் கூறி உள்ளார் என கேட்டதற்கு, ஸ்ரீரெட்டி யாரென்று கூட எனக்கு தெரியாது. அவர் செய்த சேட்டை தான் தெரியும் என்றார். இந்த சூழலில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை; மிஸ்டர் வயதான மாமா, நீங்கள் ஒரு பெண்ணை பற்றி ஊடகத்தின் முன் பேசும் போது நாவடக்கம் தேவை. பேச்சில் உன்னுடைய நடுங்கும் விதம், நல்லவருக்கு உங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து எல்லாருக்கும் தெரியும். நீங்கள் எவ்வளவு பெரிய ப்ராடு என்று ஊருக்கே தெரியும். ஊடகம் முன் பேசிவிட்டால் மரியாதைக்குரிய நபர் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் பல பெண்கள் விட்டுச் சென்றதற்கான காரணம் என்ன? அடுத்த முறை இந்த கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். நல்ல பொறுப்பில் இருப்பது முக்கியமல்ல, மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். யாரையும் பெயர் குறிப்பிடாமல் வெளிவந்துள்ள ஸ்ரீரெட்டியின் இந்த பதிவு சர்ச்சையை கிளப்பி உள்ளது.