எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது நோக்கமல்ல actoress kasturi|
பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசுபவர்கள் பற்றி நடிகை கஸ்தூரி, பேசியது சர்ச்சையானது. 300 ஆண்டுகளுக்கு முன், அந்தப்புரத்தில் சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் தமிழர்கள் என்றால், எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் யார் என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், கஸ்தூரி விளக்கம் அளித்தார். நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னேன். ஆனால், தெலுங்கு மக்களை சொன்னதாக திரித்து பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்றார். இச்சூழலில், தமது பேச்சுக்கு கஸ்தூரி அறிக்கை மூலம் வருத்தம் தெரிவித்தார். கடந்த 2 நாட்களாக எனக்கு மிரட்டல்கள், தாக்குதல்கள் வருகின்றன.