உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொள்ளையர்களை நேருக்கு நேர் சந்தித்த திக் திக் நிமிடம் | Actress sona home | Theft attempt | Thiefs

கொள்ளையர்களை நேருக்கு நேர் சந்தித்த திக் திக் நிமிடம் | Actress sona home | Theft attempt | Thiefs

ரஜினியின் குசேலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சோனா. சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 2வது தெருவில் வசிக்கிறார். இந்த வீட்டில் 6 மாதங்களுக்கு முன்பு தான் சோனா குடியேறி இருக்கிறார். ஷூட்டிங்கிற்காக அடிக்கடி வெளியே சென்று விடுவதால் பெரும்பாலும் வீடு பூட்டியே இருந்துள்ளது. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து இரவு மதில் சுவர் எகிறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டின் பின்புறம் பொருத்தியிருந்த ஏசி அவுட்டோர் யூனிட்டை கழட்டி திருட முயன்றுள்ளனர். சோனாவின் வளர்ப்பு நாய் சத்தம் போட்டதால் வெளியே வந்த அவர், திருடர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். யாரும் இல்லை என நினைத்து உள்ளே குதித்த திருடர்களுக்கு திடீரென சோனா வந்ததால் அவர்களும் ஷாக் ஆகினர். சட்டென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சோனாவை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி