உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார் | ADMK | ADMK MLA | Valparai MLA

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார் | ADMK | ADMK MLA | Valparai MLA

கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி வயது 60. வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி புற்று நோயால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கேட்டறிந்தனர். இந்த சூழலில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி இறந்தார். மறைந்த அமுல் கந்தசாமிக்கு, கலைச்செல்வி என்ற மனைவியும், சுப நிதி என்ற மகளும் உள்ளனர். சிறு வயது முதலே அதிமுகவில் பணியாற்றிய அமுல் கந்தசாமி, ஒரு முறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், ஒருமுறை கவுன்சிலர் ஆகவும் பணியாற்றி உள்ளார். 2021ல் வால்பாறை தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமுல் கந்தசாமி மறைவுக்கு பழனிசாமி உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜூன் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை