உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பழனிசாமி வேனை மறிக்க வந்த கூட்டம்-பரபரப்பு |admk crisis |protest against palanisamy| sengottaiyan

பழனிசாமி வேனை மறிக்க வந்த கூட்டம்-பரபரப்பு |admk crisis |protest against palanisamy| sengottaiyan

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். கட்சி விதிகளை செங்கோட்டையன் மீறியதாக கூறி, அவர் வகித்த அனைத்து பதவிகளையும் பழனிசாமி பறித்தார். ஓபிஎஸ், தினகரன் பாஜ கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிமுக, பாஜ கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்துக்காக பழனிசாமி திண்டுக்கல் வந்திருந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 2வது நாளாக இன்று பிரசாரம் செய்தார். இதற்காக திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டிக்கு பிரசார வாகனத்தில் சென்றார். திண்டுக்கல்-மதுரை ரோட்டில் தோமையார்புரம் பிரிவு அருகே பதாகைகளுடன் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு நின்றனர். பழனிசாமியின் பிரசாரம் வந்ததும் அதை மறிக்க முயன்றனர். ஆனால் அவர்களை தடுக்க ஏற்கனவே போலீஸ் வாகனம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. பழனிசாமி பிரசார வாகனம் வந்ததும், அவரது பாதுகாவலர்கள் கீழே இறங்கி வந்தனர். கழகத்தை அழிக்காதே என்று பழனிசாமிக்கு எதிராகவும், பிரிந்து சென்றவர்களை சேர்க்கக்கோரியும் வந்திருந்தவர்கள் கோஷம் போட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை