உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சங்கரன்கோவில் மேலநீலிதநல்லுார் கிராமத்தில் பதட்டம் | ADMK Executive Murder | Thenkasi

சங்கரன்கோவில் மேலநீலிதநல்லுார் கிராமத்தில் பதட்டம் | ADMK Executive Murder | Thenkasi

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெளியப்பன் வயது 52. அதிமுக பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் படு பிஸியாக இருந்தார். இவரது மனைவி மாரிச்செல்வி. இவர் மேலநீலிதநல்லூர் ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர். வெளியப்பன் இன்று காலை வழக்கம்போல வாக்கிங் சென்றார். கிராமத்தின் பிரதான சாலையில் சென்றபோது டூவீலரில் வந்த சிலர் அவரை வழிமறித்தனர். கும்பலிடம் இருந்து வெளியப்பன் தப்பி ஓட்டம் பிடித்தார். அந்த கும்பல் அவரை விரட்டிச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டு எஸ்கேப் ஆனது. ரத்த வெள்ளத்தில் கிடந்த வெளியப்பனை பார்த்து கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வெளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பினர். ஆஸ்பிடல் சென்ற அவரது மனைவி மாரிச்செல்வி கதறி துடித்தார். வெளியப்பன் கொலை செய்யப்பட்ட இடத்தை தென்காசி எஸ்பி சீனிவாசன் பார்வையிட்டார். சில மாதங்களுக்கு முன் மேலநீலிதநல்லூர் கிராமத்தில் கோயில் திருவிழா நடந்தது. அப்போது, வெளியப்பனுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இந்த முன்விரோதத்தால் வெளியப்பன் கொல்லப்பட்டாரா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளியப்பன் கொலையால் மேலநீலிதநல்லூர் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசாகர் குவிக்கப்பட்டனர்.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி