/ தினமலர் டிவி
/ பொது
/ புதிய தொழில்நுட்பத்தோடு அழைக்கிறது வேளாண் பல்கலை | Agricultural University Coimbatore
புதிய தொழில்நுட்பத்தோடு அழைக்கிறது வேளாண் பல்கலை | Agricultural University Coimbatore
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ், நிதி பிரயாஸ் திட்டம் கோவை வேளாண் பல்கலைகழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க 1 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று விதமான ஆய்வகங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி., போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் மட்டுமே உள்ள 3டி பிரிண்டர், பயோ பிரிண்டர், பி.சி.பி., மில்லிங் உள்ளிட்ட 24 வகையான இயந்திரங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. மிக முக்கியமாக ரிடார்ட் பவுச் பேக்கேஜிங் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 40 லட்சம். இந்த இயந்திரத்தில், கீரைக்கூட்டு முதல் பிரியாணி வரை எந்த உணவையும் பதப்படுத்தலாம்.
ஆக 02, 2025