உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமான விபத்தில் பதைபதைக்க வைத்த பாச தாயின் போராட்டம் ahmedabad plane crash | akash patni | ai a171

விமான விபத்தில் பதைபதைக்க வைத்த பாச தாயின் போராட்டம் ahmedabad plane crash | akash patni | ai a171

உலகம் அந்த நடுக்கத்தில் இருந்து மீளவில்லை. இந்தியர்களின் இதயத்தை இன்னும் சோகம் பிழிந்து கொண்டிருக்கிறது. ஆமதாபாத் துயரத்தை நினைத்தாலே நெஞ்சம் கனத்து விடுகிறது. மனம் பதைபதைத்து போகிறது. 230 பயணிகள்; 2 பைலட்; 10 ஊழியர்கள். ஒருத்தரை தவிர வேறு எவரும் உயிர் தப்ப முடியாத கோரம். ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இதயத்தில் பல கனவுகள். எதிர்காலத்தை குறித்து நிறைய திட்டங்கள். ரன்வேயில் இருந்து உயர ஏறிய ஒரு நிமிடத்துக்குள் விமானம் விழுந்து வெடித்து விட்டது. தரையில் இருந்த 30,000 முதல் 40,000 அடி உயரம் வரை விமானத்தை தூக்க வேண்டும். ஆனால், 645 அடி போனதுமே விமானம் கீழே விழுந்து வெடித்தது. உள்ளே இருந்தவர்களின் கனவுகளும் எதிர்கால திட்டங்களும் சேர்ந்து நொறுங்கின. விமான விபத்துக்கான காரணம் என்ன என்பதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. ‛என்னனு தெரியல; விமானம் மேல போகல; வேகமா கீழ வருது மேடே அலர்ட் கொடுத்த பிறகு பைலட் கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இவை தான். சொல்லி முடித்த மறுகணமே, ஏர்போர்ட் பக்கத்தில் இருந்த மெடிக்கல் காலேஜ் மீது விழுந்து விமானம் நொறுங்கியது. 241 உயிர் போய் விட்டதே என்று உடல் நடுங்கும் போது, கல்லூரி மெஸ்சில் கலகலப்பாக பேசி சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும், விடுதியில் உலகை மறந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவர்களும் 241 பேருடன் சேர்ந்து சாம்பலாகினர்.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ