உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதுக்கு எடப்பாடி கண்டனம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதுக்கு எடப்பாடி கண்டனம்

கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி பத்திரம் மூலம் அபகரித்து கொண்டார். இதுபற்றி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார் என கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்பாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டார்.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை