உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆய்வுக்கு உள்ளாகும் போயிங் 787 ரக டிரீம்லைனர் விமானங்கள் Air India crash|DGCA order|Safety checks

ஆய்வுக்கு உள்ளாகும் போயிங் 787 ரக டிரீம்லைனர் விமானங்கள் Air India crash|DGCA order|Safety checks

குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ரக டிரீம்லைனர் விமானம் விபத்தில் சிக்கியது. ஏர்போர்ட்டில் இருந்து டேக் ஆப் ஆன அடுத்த 30 வினாடிகளில் அருகில் உள்ள மெடிக்கல் காலேஜ் கட்டடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியது. 169 இந்தியர்கள், 53 வெளிநாட்டவர்கள், 2 பைலட், 10 ஊழியர்கள் என விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரை தவிற அனைவரும் பலியாகினர். ஒரே நேரத்தில் இத்தனை உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி போட்டுள்ளது. விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் இயக்கும் அனைத்து போயிங் 787-8/9 ரக விமானங்களை ஜூன் 15 முதல் ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி எரிபொருள் அளவு கண்காணிப்பு, கேபின் ஏர் கம்ப்ரசர் ஆய்வு, எலக்ட்ரானிக் இன்ஜின் கன்ட்ரோல் சிஸ்டம் சோதனை, எஞ்சின் எரிபொருள், ஆயில் சிஸ்டம் சோதனை, ஹைட்ராலிக் அமைப்பின் சேவை திறனை சரிபார்த்தல், டேக் ஆப் பாராமீட்டர்களை மதிப்பாய்வு செய்தல் என 6 வகையான சோதனைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !