ஜனாதிபதி முதல் விஜய் வரை தலைவர்கள் இரங்கல் | Air india flight crash | Ahmedabad | President Murmu |
நாட்டை உலுக்கிய விமான விபத்து பயணிகளின் குடும்பம் உணரும் வலி கற்பனை செய்ய முடியாதது டிஸ்க்: குஜராத்தின் ஆமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து பற்றி அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். மனதை உடைக்கும் பேரழிவில் பாதித்த மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் தேசம் துணை நிற்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பதிவில், விமான விபத்து குறித்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது பிரார்த்தனைகள் என கூறியுள்ளார். ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து இதயத்தை உடைக்கிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.