உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விமானம் விழுந்த கட்டடத்தின் மாடியில் கிடந்த கருப்பு பெட்டி மீட்பு! Air India Flight Accident | Ahmed

விமானம் விழுந்த கட்டடத்தின் மாடியில் கிடந்த கருப்பு பெட்டி மீட்பு! Air India Flight Accident | Ahmed

குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலரது உடல்கள் கருகின. இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார். விமானத்தின் இரு இன்ஜின்களும் செயல் இழந்தன, பறவை மோதியது, எரிபொருள் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது என யூகத்தின் அடிப்படையில் விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை